உள்நாட்டு ஆயுதங்களுடன் இந்தியா எதிர்கால போர்களை வெல்லும் - முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்

0 1135
உள்நாட்டு ஆயுதங்களுடன் இந்தியா எதிர்கால போர்களை வெல்லும் - முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்

எதிர்காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை வைத்துக் கொண்டே இந்தியா போர்களில் வெற்றி பெறும் என முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லி டிஆர்டிஓவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராணுவத்தில் சுயசார்பை எட்ட டிஆர்டிஓ உதவிகரமாக இருக்கும் என்றார்.

வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்புறங்களில் பல சவால்களை சந்தித்து வருகிறோம் என பிபின் ராவத் கூறினார். ராணுவ சுயசார்புக்காக டிஆர்டிஓ விடாமுயற்சியுடன் பங்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டின் போர்த்திறனை அதிகரிக்க, முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்களை உருவாக்கித் தர வேண்டும் என பிபின் ராவத் டிஆர்டிஓ அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments