'இப்போல்லாம் யார்யா போன் பேச வாரா?'- முதியவருக்கு வீடாக மாறிய டெலிபோன் பூத்

0 7393

மதுரையில் 10 ஆண்டுகளாக டெலிபோன் பூத்திற்குள் குடித்தனம் நடத்தி வருகிறார் 75 வயதாகும் முதியவர் கஸ்தூரிரங்கன்.

மதுரை கே.கே.நகர் மல்லிகை குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் 75 வயது முதியவர் கஸ்தூரிரங்கன். மாற்றுத்திறனாளியான இவருக்கு 1988 ஆம் ஆண்டு, தமிழக அரசு உடல் ஊனமுற்றோருக்கான கோட்டாவில் இலவச தொலைபேசி பூத் நடத்த அனுமதி வழங்கியது. இதில், கிடைத்த வருவாயை வைத்து கஸ்தூரிரங்கன் குடும்பம் நடத்தி வந்தார். தன் மகனையும் இந்த பூத்தில் கிடைத்த வருவாயில்தான் வளர்த்தார். இதற்கிடையே, கஸ்தூரி ரங்கனின் மனைவி சுந்தரி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஒரே மகனான பாலமுருகனும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் சென்று விட்டார். இதனால், தனிமரமான கஸ்தூரி ரங்கன் சாலையோரமுள்ள டெலிபோன் பூத்திலேயே தனிமையில் வாழ தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி அசுரவேகம் எடுத்தது. இதன் காரணமாக செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்ற நிலை உருவானது. இதனால், பொது தொலைப்பேசிக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்தது. கஸ்தூரிரங்கனின் பூத்தும் ஈயடிக்க தொடங்கியது. இதனால் வருமானம் இல்லாமல் டெலிபோன் பூத்தை மூடி விட்டு அதிலேயே வாழ்க்கை நடத்த தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பூத்தில்தான் கஸ்தூரிரங்கன் வசிக்கிறார். முதியோர் உதவித் தொகை மட்டுமே அவருக்கு வாழ்வாதாராமாக உள்ளது. அக்கம்பக்கத்தினர் சிலர் அவ்வப்போது உணவு, உடை மற்றும் சிறு தேவைகளை கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இதுக்குறித்து கஸ்தூரிரங்கன் கூறுகையில், செல்போன்கள் வருகையால் கடைக்கு போன் பேச யாருமே வருவதில்லை. தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து குளித்து அந்த டெலிபோன் பூத்துக்கள் வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறேன். என் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பரிதாபத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments