யாருகிட்ட... மணல் அள்ளிய மாட்டு வண்டியை ஓட்டி சென்ற போலீஸார்!

0 28983

திருவள்ளூர் அருகே மணல் கொள்ளையர்கள் விட்டு சென்ற மாட்டு வண்டியை போலீஸார் ஓட்டி சென்றதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ராமதண்டலம் கிராமத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக புகார் வந்தது. ஆற்றில் மண் அள்ளாதீர்கள் என்று போலீஸார் பல முறை எச்சரித்தும் பலன் இல்லை. இந்த நிலையில், பட்டப்பகலில் ஆற்றில் மண் அள்ளப்படுவதாக புல்லரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து, புல்லரம்பாக்கம் காவல் நிலைய தலைமைக்காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்று கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றின் கரையோரத்தில் மாட்டு வண்டியில் சிலர் மண் அள்ளிக் கொண்டிருந்தனர்.

போலீஸாரை கண்டதும் சுதாரித்துக் கொண்ட அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த மாட்டு வண்டியையும் மாடுகளையும் கை விட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பொதுவாக, மற்றவர்களுக்கு மாட்டு வண்டிகளை ஓட்டத் தெரியாது என்பதால் வேறு யாரையாவது அழைத்து வந்து மாட்டு வண்டிகளை ஓட்டி செல்வார்கள். ஆனால், இந்த முறை போலீஸாரே மாட்டு வண்டியை புல்லரம்பாக்கம்போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி செல்ல ‘முடிவு செய்தனர். கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு போலீஸாரே மாட்டு வண்டியை சீருடையுடன் ஓட்டி சென்றதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இதை பார்த்த பலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments