ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை போராடி மீட்ட நண்பர்கள்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரை சக நண்பர்கள் போராடி மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வேப்பூர் அடுத்த நகர் பகுதியைச் சேர்ந்த பர்கத் அலி என்பவர் அப்பகுதியில் செல்லும் மணிமுக்தாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் பர்கத் அலி வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.
உடன் சென்ற நண்பர்கள் மூங்கில் கழி கொண்டும் துணி, கயிறுகள் கொண்டும் நீண்ட நேரம் போராடி அவரை மீட்டனர்.
Comments