நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரம் : மாணவி குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைப்பு

நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரம் : மாணவி குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைப்பு
நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு விவகாரத்தில் மாணவி தீட்சாவும் குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பரமக்குடி மாணவி தீட்சா நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழைப் போலியாகத் தயாரித்து வந்து பங்கேற்றது குறித்துச் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மாணவி தீட்சா, அவர் தந்தை பாலச்சந்திரன் இருவரும் கடந்த 15ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இருவரும் ஆஜராகாததால் மீண்டும் இன்று ஆஜராகும்படி ஒரு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தீட்சா, பாலச்சந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. இதனால் அவர்களைப் பிடிக்கக் காவல் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Comments