மாட்டுச்சாணத்தில் இருந்து தயாராகும் வேதிக் பெயின்ட் விரைவில் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் பெயின்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்துள்ளார்.
வேதிக் பெயின்ட் என்ற பெயரிலான இந்த பெயின்ட் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வேதிக் பெயின்ட் உதவும் என கட்கரி கூறியிருக்கிறார்.
டிஸ்டம்பர், எமல்சன் ஆகிய இரண்டு வடிவங்களில் வெளியாக உள்ள இந்த பெயின்ட், சுவற்றில் அடித்தபின் நான்கு மணி நேரத்தில் உலர்ந்து விடும்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, இந்த பெயின்டால், கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 55 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வருமானம் கிடைக்கும் என கட்கரி கூறியுள்ளார்
One of the healthiest versions of introducing Vedic Paint in this critical period of climatic conditions. I gracefully solicit the upward thinking of Hon'ble Cabinet Minister Shri @nitin_gadkari Ji for providing a boon to India. pic.twitter.com/WUa57BtH0v
— Pratap Sarangi (@pcsarangi) December 17, 2020
Comments