நடிகை கங்கனா ரணாவத் மீது மேலும் 2 வழக்குகள்?

நடிகை கங்கனா ரணாவத் மீது மேலும் 2 வழக்குகள்?
ஏற்கனவே பல புகார்களில் சிக்கியுள்ள இந்தி நடிகை கங்கனா ரணாவத்திற்கு புதிய தலைவலியாக, அவர் மீது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி இரண்டு வழக்குகளை தொடுத்துள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா குறித்து அவமரியாதையாக டுவிட் செய்தார் என்ற புகாரின் பெயரில் இந்த வழக்குகள் பதிவாகி உள்ளன.
பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கயாவில் உள்ள சிவில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யோயோ ஃபன்னி சிங் என்பவர், குஷ்வாஹா மற்றும் அவருடன் சிலர் பங்கேற்ற தேர்தல் பிரச்சார புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அவர்களை தீவிரவாதிகள் என்ற அளவுக்கு சித்தரித்தார். அந்த டுவிட்டை கங்கனா ரணாவத் மறுடுவீட் செய்ததே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
Comments