மேற்குத் தொடர்ச்சிமலையில் பெய்த மழையால் நிரம்பியது பாபநாசம் அணை... விவசாயிகள் மகிழ்ச்சி

0 2480

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இரு மாவட்ட விவசாயத்துக்கும், நான்கு மாவட்டக் குடிநீர்த் தேவைக்கும் ஆதாரமாகத் தாமிரபரணி ஆறு உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தாமிரபரணியில் உள்ள பாபநாசம் அணை ஓராண்டுக்குப் பின் அதன் முழுக் கொள்ளளவான 143 அடியை எட்டியுள்ளது.

மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளன. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனா அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பியுள்ளது.

84 அடி உயரமுள்ள இராமநதி அணையில் 80 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments