தங்களது கொரோனா தடுப்பூசியை இரண்டு முழு டோசுகள் போட்டால் நல்ல பயன்-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

தங்களது தடுப்பூசியை இரண்டு முழு டோசுகள் போட்டால், கொரோனாவுக்கு எதிரான சிறந்த நோய் எதிர்ப்பு திறன் கிடைக்கும்என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் உரிமை பன்னாட்டு மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இறுதி கட்ட சோதனை முடிவுகள் குறித்த தகவலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆனால் அதில், முதலில் ஒரு அரை டோசும், அதன் பின்னர் ஒரு முழு டோசும் தடுப்பூசி போட்டால் நோய் எதிர்ப்புத் திறன் நல்ல முறையில் உருவாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த முடிவை உறுதி செய்ய மேலும் சில சோதனைகள் அவசியம் எனவும் ஆஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி கூடுதலாக டி.செல்களையும் உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Two new papers on more detailed immunology of the Oxford-AZ vaccine: multifunctional Ab responses and T cell immunity https://t.co/RSueHOle72
— Jenner Institute (@JennerInstitute) December 17, 2020
Comments