1 3 ஆண்டு கால மெஸ்ஸி , ரொனால்டோ ஆதிக்கத்துக்கு முடிவு ... இந்த முறை லெவோண்டஸ்கி

0 4593

இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை போலந்து மற்றும் பேயர்ன்மியூனிக் ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவோண்டஸ்கி (( Lewandowski))தட்டி சென்றார்.

தற்போது, ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடி வரும் போலந்து அணியின் கேப்டன் தன் வாழ்க்கையில் பெற்ற உச்சபட்ச விருது இதுவாகும். லெவோண்டஸ்கியின் அதிரடி ஆட்டம் காரணமாக பந்தஸ்லீகா , ஜெர்மன் போகல் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் பேயர்ன் அணி கோப்பையை வென்றது. இந்த சீசனில் மட்டும் லெவோண்டஸ்கி 55 கோல்களை அடித்திருந்தார். முதலிடத்தை பிடித்த லெவோண்டஸ்கிக்கு 5 2 ஓட்டுகளும் இரண்டாவது இடம் பிடித்த ரொனால்டோவுக்கு 38 ஓட்டுகளும் அடுத்ததாக மெஸ்ஸிக்கு 35 ஓட்டுகளும் கிடைத்தன. தேசிய அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், விளையாட்டு செய்தியாளர்கள் வாக்களித்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்தனர்.

கடந்த 13 ஆண்டுகளாக இந்த விருதை மெஸ்ஸியும் ரொனால்டோவும் மட்டுமே பெற்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி போது ரொனால்டோ இந்த விருதை பெற்றார். பிறகு, ரொனால்டோ ஸ்பெயின்  நாட்டின் ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடிய ரொனால்டோவும் பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸியும்தான் மாற்றி மாற்றி இந்த விருதை பெற்று வந்தனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் நாட்டு கிளப் அணியை சாராத லெவோண்டஸ்கி பிஃபா சிறந்த வீரருக்கான விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த பயிற்சியாளருக்கான விருதை  லிவர்பூல் அணியின் ஜர்கன் கிளாப் பெற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments