ஜே.பி.நட்டா சென்ற கார்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்

0 830
ஜே.பி.நட்டா சென்ற கார்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு மத்திய அரசு மீண்டும் சம்மன்

மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கொல்கத்தாவில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சென்ற கார்கள் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மாநிலத் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி மத்திய உள்துறைச் செயலாளர் சம்மன் அனுப்பினார்.

அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்ப மாநில அரசு மறுத்துவிட்ட நிலையில் மீண்டும் இன்று மாலை ஐந்தரை மணிக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்க அரசு அளித்துள்ள பதிலில் கொரோனா சூழலில் காணொலியில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments