பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதிற்கும் குறைவான பிரிவினருக்கு, தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அளிக்க அரசு முடிவு

0 2271

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் 50 வயதிற்கும் குறைவான, அதே நேரம் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வகையில் சுமார் ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக போடப்படும் என கூறப்படுகிறது. அதே நேரம் இந்த பிரிவினரை எப்படி அடையாளம் காண்பது? என்பதும் அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

எனவே, தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய நிபுணர் குழுவின் கீழ் இதற்காக தனியாக ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ள தடுப்பூசி திட்டத்தில் இவர்களை தவிர, ஒரு கோடி மருத்துவ பணியாளர்கள், 2 கோடி முன்கள பணியாளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட 26 கோடி பேர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments