சீனா உடனான உறவில் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இலங்கையை பார்த்து நேபாளம் கற்றுக் கொள்ள வேண்டும்- பிபின் ராவத்

0 1239
சீனா உடனான உறவில் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இலங்கையை பார்த்து நேபாளம் கற்றுக் கொள்ள வேண்டும்- பிபின் ராவத்

சீனா உடனான உறவில் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை இலங்கையை பார்த்து நேபாளம் கற்றுக் கொள்ள வேண்டும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய-நேபாள அமைப்புகள் சேர்ந்து நடத்திய வருடாந்திரகூட்டம் ஒன்றில் பேசிய அவர், கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே தனித்துவமான, ஆழமான மற்றும் விரிவான உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

ஆனால் இப்போது, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் நேபாளம் உறவை வளர்த்து வருவதாக அவர் கூறினார். இதனால் இந்தியா நேபாளத்துடனான தனது நல்லுறவை விட்டுக் கொடுக்காது என்ற அவர், சீன உறவை ஜாக்கிரதையுடன் மேற்கொள்ளுமாறு நேபாளத்தை அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments