D.T.Ed. எனப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய தேர்வில் 2.5 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி எனத் தகவல்

D.T.Ed. எனப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய தேர்வில் 2.5 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி எனத் தகவல்
கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்த D.T.Ed. எனப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய தேர்வில் 2.5 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய தேர்வு எனப்படும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேர் வரை இந்த தேர்வை எழுதியதாக கூறப்படும் நிலையில், அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் 2.5 விழுக்காட்டினர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாகவும் 97.5 விழுக்காட்டினர் தோல்வியை தழுவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments