தென் ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் உருண்டு புரண்டு விளையாடிய குட்டி யானைகள்

தென் ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இரு சகோதர யானைகள் ஒன்றின் மேல் ஒன்று உருண்டு புரண்டு விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
அட்டோ யானைகள் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் யானைகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு குட்டி யானை இதமான வெயிலை அனுபவிக்கும் வகையில் தரையில் உருண்டு புரண்டது.
அப்போது அதன் மூத்த சகோதரி, குட்டியின் காலைப் பிடித்து இழுத்து விளையாட்டுக் காட்டியது.
சிறிது நேரம் கழித்து மூத்த சகோதரி யானை தரையில் படுத்துக் கொள்ள குட்டிச் சகோதரியும் தனது பங்கிற்கு அதன் மேல் உருண்டு புரண்டது. இந்தக் காட்சி சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்தியது.
Comments