தமிழகம் உள்பட நான்கு மாநிலங்கள், புதுச்சேரிக்கு சட்டமன்றத் தேர்தல்... முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

தமிழகம் உள்பட நான்கு மாநிலங்கள், புதுச்சேரிக்கு சட்டமன்றத் தேர்தல்... முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
தமிழ்நாடு உள்பட நான்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் அதிகாரிகள் 21ந் தேதி சென்னைக்கு வர உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கு தலா இரண்டு மூத்த அதிகாரிகள் வருகை தர உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் ஜனவரி மாதத்தில் வெளியிட உள்ளது.
Comments