காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுங்குளிர்..!

0 2324
காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுங்குளிர்..!

காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் குளிர் வாட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட நகரங்களில் 3 டிகிரி முதல் மைனஸ் 6 டிகிரி வரை குளிர் நிலவியது.

இந்தப் பருவத்தில் இவ்விரு நகரங்களிலும் பதிவான மிகக் குளிரான நாளாக இருந்ததாக வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச குளிராக குல்மார்க்கில் வெப்பநிலை மைனஸ் 11 டிகிரியாக பதிவானது.

கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் பெரும்பாலான நீர் உறைந்துபோயுள்ளது. உறைபனியால் காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments