பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்..!

0 812
பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தம்..!

கவல் தொடர்பு சேவைக்கான சிஎம்எஸ்-01செயற்கை கோளை, இஸ்ரோ வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட், சிஎம்எஸ்-01 என்ற தகவல் தொடர்பு சேவைக்கான செயற்கை கோளை சுமந்தபடி, பிற்பகல் 3.41 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது.

சரியாக 20 நிமிடத்திற்குப் பின் செயற்கை கோள் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அடுத்த 4 நாட்களில் குறிப்பிட்ட இடத்தில் செயற்கை கோள் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments