”வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 38 லட்சம் பேர் மீட்பு” - வெளியுறவுத்துறை

”வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 38 லட்சம் பேர் மீட்பு” - வெளியுறவுத்துறை
வந்தேபாரத் திட்டத்தின் 8ம் கட்ட மீட்பு நடவடிக்கையில் தற்போது வரை ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா செய்தியாளிடம் பேசும்போது, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 38 லட்சம் பேர் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதில் 8ம் கட்ட மீட்புப் பணிகள் கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருவதாகக் குறிப்பிட்டார். 23 நாடுகளில் நடந்த பயணிகள் பரிவர்த்தனை மூலம் ஒரு லட்சத்து 3 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அனுராக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார்.
Comments