இன்று காலை 11.30 மணிக்கு மேற்குவங்கம் செல்கிறார் அமித் ஷா?

இன்று காலை 11.30 மணிக்கு மேற்குவங்கம் செல்கிறார் அமித் ஷா?
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று காலை 11.30 மணிக்கு மேற்கு வங்கத்திற்கு செல்கிறார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு மூத்த தலைவர்கள் அவரது முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த அமித் ஷா மேற்குவங்கத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமது இரண்டு நாள் வங்கப் பயணத்தின் போது, விஸ்வ பாரதி பல்கலைக்கழக நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்க உள்ளார்.
Comments