இந்தியாவுக்கு உலக வங்கி 400 மில்லியன் டாலர் கடனுதவி..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளைப் பாதுகாக்கும் வகையில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
கடந்த மே மாதத்தில் 750 மில்லியன் டாலர்களுக்கான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டதால் தற்போது 2ம் கட்டமாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைகளின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக டாக்டர் மொஹாபத்ராவும், உலக வங்கி சார்பாக இந்தியாவின் செயல் இயக்குநர் சுமிலா குல்யானியும் கையெழுத்திட்டனர்.
India, #WorldBank sign 400 million dollar project to protect India’s poor and vulnerable from the impact of #COVID19. Finance Ministry says, this is the 2nd operation in a programmatic series of two. The first operation of 750 million dollar was approved in May 2020. pic.twitter.com/1k86V8W0CX
— newsblunt (@newsbluntmedia) December 16, 2020
Comments