வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது என்றும், அதேசமயம் போராட்டம் எந்தஒரு தனிநபருடைய வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் குளிர்கால விடுமுறை அமர்வு இனி விசாரிக்குமென தலைமை நீதிபதி தெரிவித்தார்.
வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம்
போராட்டம் எந்த தனிநபர் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம்))
Comments