'மனரீதியிலான சித்ரவதை விடை பெறுகிறேன்'- பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்

மனரீதியாக சித்திரவதை அனுபவித்ததால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெறுவதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் 5 ஆண்டுக்காலம் தடை முடிந்த பின் 2016-ம் ஆண்டு மீண்டும் அணிக்கு திரும்பினார். கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த விரும்புவதால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்தார்.
இந்நிலையில், தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் தன்னால் விளையாட முடியாது என முகமது அமீர் சர்வ தேச போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' எனக்கு மனரீதியாக சித்திரவதை கொடுக்கிறார்கள். இதை என்னால் அனுபவிக்க முடியாது. பல வருடங்களாக இவர்களின் சித்திரவதையை அனுபவித்துவிட்டேன்.
ஒவ்வொரு மாதமும் யாரவது ஒருவர் என்னிடம் நம்மை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் புறகணித்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். நான் பிறகு, இது தொடர்பாக விளக்கமாக பேச உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.
Comments