சென்னை : சாதாரண பைக்கை நிறுத்தி விட்டு ரூ.2 லட்சம் மதிப்புடைய பைக்கை திருடியவர்களுக்கு வலைவீச்சு

0 4721

சென்னை அருகே சாதாரண பைக்கை நிறுத்தி விட்டு, விலை உயர்ந்த பைக்கை திருடிச் சென்ற வாகன திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த விஷால், கடந்த 14ஆம் தேதி இரவு வீட்டுக்கு வெளியே 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் பைக்கை நிறுத்தி இருந்தார்.

காலை அதனை காணவில்லை. புகாரின்பேரில் சிசிடிவி காட்சியை போலீசார் ஆய்வு செய்தபோது, இரவில் 2 பேர் தாங்கள் கொண்டு வந்த சாதாரண பைகை நிறுத்தி விட்டு, விசாலின் பைக்கை திருடிச் செல்லும் காட்சிகள் இருந்தன. இந்த காட்சியை அடிப்படையாக வைத்து 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments