தருமபுரி: குடும்பப் பெண்களை குறி வைத்து தொல்லை... 'ராங் ' நண்பருடன் கைதான 'ராங்' நம்பர் ஸ்பெஷலிஸ்ட்!

0 49981

தருமபுரியில், திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் தனது கணவருடன் புகார் ஒன்றை அளித்தார். அதில் தருமபுரியை அடுத்துள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது செல்போனில் தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நெம்பர் என கட் செய்தாலும், மீண்டும் மீண்டும் போன் செய்தும் வாட்சப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியும் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையே ரவியின் தொல்லையால் கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர் தெரிந்த நண்பர்கள் உதவியுடன் ரவியின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். மேலும் , அவனுடைய செல்போனை பறித்து அதை ஆய்வு செய்து பார்த்த போது,  ரவியும் அவனுடைய நண்பர் நரசிம்மனும் என்பவரும் சேர்ந்து பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏராளமாக இருந்தன. 

வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் தருமபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருந்ததால், அதிலுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு இருவரும் வலை வீசிசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.  அவர்களுக்கு  உடன்படும் பெண்களின் போன் உரையாடல்கள் மற்றும் போட்டோக்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஆசைக்கு இணங்க மிரட்டி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் அவரின் நண்பன் நரசிம்மனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் . இவர்களது தொல்லையால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண், தருமபுரி நகர் காவல் நிலையத்தில் கடந்த 12 ஆம் தேதி புகார் அளித்ததின் பெயரில் காவல் துறை அதிகாரி ஒருவர் ரவியிடம் செல்போனில் விசாரித்துள்ளார்.

அப்போது, தான் வேலூரை சேர்ந்த விஜய் எனவும், தோழி சிம்ரனுக்கு போன் செய்தேன் என்றும் அப்பாவியை போல கெஞ்சி நடித்து தப்பியதும் தெரியவந்துள்ளது. ஒரு சில பெண்கள் மட்டும் துணிச்சலுடன் புகார் அளித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments