விண்ணில் பாய்ந்தது, பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

0 2234

சிஎம்எஸ் - 1 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது. பிற்பகல் 3.41 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் ஏவப்பட்டது.

விண்ணில் சீறிப்பாய்ந்த பிஎஸ்எல்வி, திட்டமிட்டபடி சுற்றுவட்டப் பாதையில் சிஎம்எஸ் - 1 செயற்கைக்கோளை செலுத்தியது. இதன் மூலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 52ஆவது பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது.

பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ள சிஎம்எஸ் - 1 இந்தியாவின் 42ஆவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். பேரிடர் மேலாண்மை, இண்டர்நெட் சேவை, தொலைநிலைக் கல்வி, டெலிமெடிசின் உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments