ஆந்திரா : மனைவியுடன் தொடர்பு வைத்த இளைஞர், பேச்சுவார்த்தை வா என வரவழைத்து கணவன் நடுரோட்டில் குத்திக் கொன்ற சிசிடிவி காட்சி
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த இளைஞரை நடுரோட்டில் கணவன் குத்திக் கொன்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஓங்கோலை சேர்ந்த ஜோசப் என்பவரின் மனைவிக்கு, தனுஷ் என்ற இளைஞருடன் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. பல முறை கண்டித்தும் மனைவி கேட்காததால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே மனைவி மற்றும் தனுசை ஜோசப் வரவழைத்துள்ளார்.
அதன்படி தனுஷ் வந்தவுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக பல முறை அவரை ஜோசப் குத்தினார். மனைவி மற்றும் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தடுக்க முயன்றும், தனுஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலை செய்த ஜோசப் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments