காவல்துறை காலிப்பணியிடங்கள் நிரப்புவது, ஊதிய உயர்வு பிரச்சனை : நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

காவல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது, ஊதிய உயர்வு தொடர்பாக நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தவறினால், உள்துறைச் செயலர், காவல்துறை தலைவர் ஆஜராக நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்த அளவு 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல் துறையினர் உள்ளனர் என்றும், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைவிட குறைந்த ஊதியத்தில் பணிபுரிவதாகவும் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. போலீசாரின் தேவைகள், அதற்கான தீர்வு குறித்து பதில் அளிப்பதில் என்ன பிரச்சனை? மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர் என்றும், காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் காலதாமதம் செய்யலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Comments