டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நாளை உண்ணாவிரதம்... காவல்துறை அனுமதி மறுப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துள்ளது. கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், திமுகவின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.
Comments