இந்தியா - வங்க தேசம் இடையே 55 ஆண்டுகளுக்கு பின் ரயில்சேவை தொடக்கம்

55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவையை இரு நாடுகளின் பிரதமர்கள் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே, காணொலி வாயிலாக உச்சிமாநாடு நடைபெற்றது.
இரு பிரதமர்களும் இணைந்து மகாத்மா காந்தி மற்றும் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்தனர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்த நினைவு தபால் தலையை வெளியிட்டனர். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சிலாஹதி-ஹல்திபரி ரெயில் சேவையையும் துவக்கி வைத்தனர்.
இந்த உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அண்டை மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் குறிப்பிடத்தக்க தூண் வங்கதேசம் என்றார். வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக அவர் கூறினார்.
Comments