கன்னியாகுமரியில் க்யூ பிரிவு காவலரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்... 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் தகராறை விலக்கி விட்ட க்யூ பிரிவு காவலரை கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் பீச் ரோடு சாலையில் திருமண விழாவிற்கு சென்று வந்து கொண்டு இருந்த வாகனம் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அவ் வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கியூ பிரிவு காவலர் சிவா என்பவர், போக்குவரத்தை சரிசெய்ய முயன்றுள்ளார். இதனால் தாமதம் ஏற்பட்டதால் திருமண வீட்டிற்கு சென்று வந்த கும்பல் கியூ பிரிவு காவலரை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் பள்ளம் பகுதியை சேர்ந்த ஜெயஸ்டன், ஜார்ஜ் , அந்தோணி அடிமை, ஜவஹர் ஆகிய நான்குபேரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
Comments