சென்னை பல்லாவரத்தில் நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

0 145

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் குளத்தில் மூழ்கி பெங்களூரூவைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியாயினர்.

பெங்களூரூவைச் சேர்ந்த சிறுவர்களான சரவணன் மற்றும் சஞ்சய் ஆகியோர், கோடை விடுமுறையையொட்டி பல்லாவரம் ஆதிபராசக்தி தெருவில் உள்ள தனது அத்தை விட்டிற்கு வந்திருந்தனர்.

நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்ற போது சரவணன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான். அவனைக் காப்பாற்றச் சென்ற சஞ்சய்-யும் நீரில் மூழ்கினான். தகவலறிந்த சென்ற பல்லாவரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments