திருமணத்துக்கு முன்பே லிவிங் டுகெதர்... கைவிட்ட ஐ.டி ஊழியருக்கு புத்தி புகட்டிய இளம் பெண்!

0 43418

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து விட்டு, காதலியை திருமணம் செய்ய மறுத்த ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீராமின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்து கொள்ள தன் காதலியை வீட்டிற்கு அழைத்து தங்க வைத்துள்ளார். இரண்டு மாதங்கள் ஸ்ரீராம் வீட்டில்தான் அந்த இளம் பெண்ணும் தங்கி இருந்துள்ளார். திருமணத்துக்கு முன்பே உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீராமின் தாயாருக்கு அந்த பெண் உதவியாக இருந்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில், நாம்தான் திருமணம் செய்து கொள்ளபோகிறோமே பின்னர் என்னவென்று கூறி திருமண ஆசைக்காட்டி இளம் பெண்ணிடத்தில் ஸ்ரீ ராம் எல்லை தாண்டியுள்ளார். தாலி கட்டாமலேயே இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஸ்ரீராமுக்கு காதலி போரடித்து போனதாக தெரிகிறது. ஸ்ரீராமின் ஆசை சரியாக 60 நாள்களில் முடிந்து போனது. இதனால், ஸ்ரீராம் , தன் காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் வற்புறுத்தியும் ஸ்ரீராம் மாறவில்லை. இதனால் , கடும் வேதனையடைந்த அந்த இளம் பெண் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து ஸ்ரீராம் மீது பாலியல் பலாத்காரம், நம்பிக்கை மோசடி என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments