நடிகை சித்ரா தற்கொலை: கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ. விசாரணை

0 3700

நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள கணவர் ஹேம்நாத்திடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே, சித்ராவின் பெற்றோர் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோர்களிடம் 2 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கைதான ஹேம்நாத்தை விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு ஆர்.டி.ஓ. தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் பேரில், பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அழைத்து வரப்பட்ட ஹேம்நாத்திடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments