ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்... இந்திய அணி பேட்டிங்!

0 2219

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடர், 20 ஓவர் போட்டி தொடர், டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியாவும், 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணியும் கைப்பற்றின.

இதையடுத்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 அணிகளும் விளையாடுகின்றன. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.

மோசமான பார்மில் இருப்பதாக தன்மீது முன்வைக்கப்படும் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டியில் பிருத்வி ஷா, சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், ஸ்டார்க் பந்தில் அவர் போல்டாகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இந்திய அணி தொடர்ந்து நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. 2வது விக்கெட்டுக்கு சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய மயங்க் அகர்வால், 40 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

மேலும் மைதானத்தில்  நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடிய புஜாரா, 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  அப்போது 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 100 ரன்கள் எடுத்திருந்தது.   விராட் கோலி அரை சதம் அடித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments