மூன்று பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானை… பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர்

மூன்று பேரை மிதித்துக் கொன்ற காட்டு யானை… பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அடுத்தடுத்து தந்தை மகன் உள்பட மூன்று பேரை மிதித்துக் கொன்ற ஒற்றைக் கொம்பன் காட்டு யானையைப் பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் அப்பகுதியில் முற்றுகையிட்டுள்ளனர்.
நேற்று டிரோன் மூலம் யானை இருக்குமிடம் கண்டறியப்பட்டது. காட்டு யானையை பின்தொடர்ந்த மருத்துவக்குழுவினர் நேற்று மாலையில் முதல் கட்டமாக யானைக்கு மயக்க ஊசி ஒன்றை செலுத்தினர்.
இதனால் யானை அங்கிருந்து மிரண்டு மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்ந்ததால் யானையைப் பின்தொடர்ந்து சென்று பிடிக்கும் முயற்சியில் தொய்வு ஏற்பட்டது.
நேற்று காலை துவங்கிய தேடுதல் வேட்டையில் 3 கும்கியானைகள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் முதுமலையில் இருந்து ஒரு கும்கியானையும் கொண்டு வரப்பட்டுள்ளது நான்கு கும்கியானைகளும் இன்று காட்டு யானையை தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
Comments