இந்திய எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்ரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இம்மாத தொடக்கத்தில் இந்த மசோதா காங்கிரஸ் கமிட்டியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 740 பில்லியன் டாலர் அமெரிக்க பாதுகாப்பு மசோதாவுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபை அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் அளித்துள்ளது.
செனட் சபையும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது.
இதில் அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினரான இந்திய வம்சாவளியினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறிய இந்திய எல்லையில் இருந்து தனது படை ஆக்ரமிப்பை சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
Comments