நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் மீண்டும் திறப்பு

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் மீண்டும் திறப்பு
நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்துக் கோவிலான பசுபதிநாத் ஆலயம் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தளர்வு விதிகளின்படி திறக்கப்பட்டது.
கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று அறங்காவலர்கள் தெரிவித்தனர்.
Pashupatinath Temple, closed due to pandemic, reopens after nine monthshttps://t.co/oEJdZCNDdt — Photos by @dpak_kc pic.twitter.com/634EguZgkO
— The Kathmandu Post (@kathmandupost) December 16, 2020
Comments