விவாகரத்து தொடர்பான ஒரே நாடு ஒரே சட்டம் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விவாகரத்து தொடர்பான ஒரே நாடு ஒரே சட்டம் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
விவாகரத்து தொடர்பான ஒரே நாடு ஒரே சட்டம் முறையை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் விவாகரத்து ஜீவனாம்சம் உள்ளிட்டவற்றில் பொதுச்சட்டம் கோரப்பட்டுள்ளது.
மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுச்சட்டம் அமலுக்கு கொண்டு வர மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Comments