ஆந்திராவில் பொதுமக்கள் திடீரென மயங்கி விழக் காரணம் என்ன? - எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

ஆந்திராவில், அண்மையில், திடீர், திடீரென பலரும் மயங்கி விழுந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
ஏலூர் சம்பவத்தில், பலரும் மயங்கி விழ, வேளாண் சாகுபடியின்போது, பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்தே காரணம் என்று, எய்ம்ஸ் கூறியிருக்கிறது.
பொதுமக்களின் உடலில் ஈயம் மற்றும் நிக்கல் தன்மை அதிகரிக்க காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்வதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்தானது, பாதிக்கப்பட்டவர்களுக்கு, காய்கறிகள் மூலமாக சென்றதா?, அரிசி மூலமாக சென்றதா?, அல்லது தண்ணீர் மூலம் சென்றடைந்ததா? என ஆய்வு செய்து வருவதாகவும், எய்ம்ஸ் கூறியுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் இது போன்ற விபரீத சம்பவம் நடைபெறாத வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் அமைக்க, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.
Comments