தமிழ்நாட்டில் மேலும் 1,181 பேருக்கு கொரோனா உறுதி..

0 2206
தமிழ்நாட்டில், புதிதாக 1,181 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், புதிதாக 1,181 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 12 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சென்னையில் 94 வயது மூதாட்டி ஒருவர் பலியானார்.

கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. சென்னையில் 344 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

12 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 880 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments