தொழிற் படிப்புகளை ஆங்கிலத்தில் பயின்றால் உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 1622
தொழிற் படிப்புகளை ஆங்கிலத்தில் பயின்றால் மட்டுமே, உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தொழிற் படிப்புகளை ஆங்கிலத்தில் பயின்றால் மட்டுமே, உலகம் முழுவதும் சென்று பணியாற்ற முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மாநில மொழிகளில் பயின்றால், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில், 20 விழுக்காடு தமிழ் வழி இட ஒதுக்கீட்டை, நேரடியாக கல்லூரிக்கு சென்று, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்க கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 500 பேருக்கு போலி சான்றிதழ் வழங்கிய வழக்கின் விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புப் போலீசார் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments