சேலம் மாவட்ட மக்களின் முழு ஆதரவால் சிறப்பான ஆட்சி : முதலமைச்சர்

சேலம் மாவட்ட மக்களின் முழுமையான ஆதரவால், தமது தலைமையில் மூன்றரை ஆண்டுகால ஆட்சி, சிறப்பாக நடைபெற்றுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட மக்களின் முழுமையான ஆதரவால், தமது தலைமையில் மூன்றரை ஆண்டுகால ஆட்சி, சிறப்பாக நடைபெற்றுள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேலம் கொண்டலாம்பட்டியில், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அப்போலோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக, முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் அதிமுக அரசு நீடிக்காது என்ற எதிர்க்கட்சிகளின் எண்ணத்தில், மண் விழுந்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
Comments