ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக சோதனை-மேலும் ரூ. 4 கோடி பறிமுதல்

0 2249
ஈரோடு ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 4 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 4 கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 4 கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments