தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு டிச.21-ந் தேதி தமிழகம் வருகை

0 2311
சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழகம் வரவுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழகம் வரவுள்ளது.

தேர்தல் தயார் நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அறிய உயர்மட்ட குழு தமிழகம் வர இருக்கிறது.

தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் உயர்மட்டக் குழு 21 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

முன்னதாக அன்று காலையில், 11.30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள்.  22-ந் தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments