தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிரந்தரப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அவற்றைப் பெற அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளதாகவும், விளையாட்டுகள் குறித்து அறிந்த ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments