ஜோய் ஆலுக்காசில் நகை வாங்குவது போல் திருட்டு - ஏற்கனவே திருட்டு வழக்கில் சிக்கி சிறைச்சென்ற 25 வயது இளம்பெண் மீண்டும் கைது

ஜோய் ஆலுக்காசில் நகை வாங்குவது போல் திருட்டு - ஏற்கனவே திருட்டு வழக்கில் சிக்கி சிறைச்சென்ற 25 வயது இளம்பெண் மீண்டும் கைது
சென்னையில் ஜோய் ஆலுக்காசுக்கு நகை வாங்குவது போல் வந்து திருட்டில் ஈடுபட்ட 25 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் உள்ள கடைக்கு, கடந்த மாதம் ஒன்றாம் தேதி வந்த இளம்பெண், நகை வாங்குவது போல், பல மாடல் நகைகளை, ஒவ்வொன்றாக, நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த பெண் சென்றபிறகு, 4 சவரன் கம்மல், தோடு காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய பாண்டிபஜார் போலீசார், பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த 25 வயது நிசாந்தினியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த பெண், இதே பாணியில் நகைகளை திருடி இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் என போலீசார் கூறியுள்ளனர்.
Comments