ரெய்டில் சிக்கிய டாஸ்மாக் மேலாளர்.! சிறைத்துறை டிஐஜி.யான., மனைவிக்கும் சிக்கல்.!

சென்னை டாஸ்மாக் மேலாளர் முருகன் வீடு, மற்றும், அவரது மனைவியும், வேலூர் சிறைத்துறை டிஐஜியுமான ஜெயபாரதி வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத ரொக்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில், வேளச்சேரி பீனிக்ஸ் மால், அரும்பாக்கம் ஸ்கைவாக், எழும்பூர் அல்சா மால் போன்ற வணிக வளாகங்களில் உள்ள எலைட் டாஸ்மாக் கடைகளிலும், அயனாவரம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள எலைட் மதுக்கடைகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார், செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இந்த எலைட் மதுபானக் கடைகளில், பியர் மற்றும் பிற வகை மதுபானங்களுக்கான, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, தென் சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகனின் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதலே சோதனை மேற்கொண்டனர். மேலும், அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டிலும், லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, தென் சென்னை டாஸ்மாக் மேலாளர் முருகன் மீது, வழக்குப்பதிவு செய்தனர்.
Comments