சென்னை அருகே வீட்டின் மாடியில் இருந்த டிவி, மிக்ஸி பழுது பார்க்கும் கடையில் பயங்கர தீ....

0 6232
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் வீட்டு மாடி அறையில் செயல்பட்ட டிவி, மிக்சி பழுதுநீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் வீட்டு மாடி அறையில் செயல்பட்ட டிவி, மிக்சி பழுதுநீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

விநாயகா நகரை சேர்ந்த டேவிட், தாம் அப்பகுதியில் நடத்தி வந்த டிவி, மிக்சி,கிரைண்டர் பழுது நீக்கும் கடையை ஒரு மாதத்துக்கு முன்பு காலி செய்துவிட்டு, பொருள்களை மாடி அறைக்கு கொண்டு வந்து வைத்து வேலை செய்து வந்தார்.

இன்று மதியம் முதலில் புகை வந்தநிலையில் பிறகு மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வீடு இருந்த பகுதியில் வானில் பல அடி உயரத்துக்கு புகை எழுந்தது.

தகவலின்பேரில் 2 வண்டிகளில் 7 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments