வீட்டிலேயே மது தயாரிப்பதில் வல்லவர்களாம்... தடையை மிஞ்சி குடிப்பதில் மராட்டியர்களை மிஞ்சிய பீகார் மக்கள்!

0 8691

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் முதல்வரானது கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் மதுவுக்கு முற்றிலும் தடை விதித்தார். ஆனாலும், நிதிஷ்குமார் எடுத்த முயற்சிக்கு முற்றிலும் பலன் கிடைக்கவில்லை என்பது இந்த ஆண்டுக்கான தெசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று பீகார். இந்தியா முழுக்க பல மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களாகவும் பீகார் மக்கள்தான் பெரும்பாலும் இருப்பார்கள். கல்வி அறிவில் பின்தங்கியும் வறுமையில் உழன்றும் வரும் பீகார் மக்கள் மதுவுக்கும் அடிமையாகி கிடந்தனர். மது அரக்கன் பிடியிலிருந்து பீகார் மக்களை மீட்கும் முயற்சியாக அந்த மாநிலத்தில் மதுவுக்கு முற்றிலுமாக தடை விதித்தார் நிதிஷ் குமார். இதனால், பீகாரில் மது அருந்தும் பழக்கம் குறையும் என்பது நிதிஷ்குமாரின் எதிர்பார்ப்பு. ஆனால், நடந்ததோ வேறு என்று இந்த ஆண்டுக்கான குடும்ப நல சுகாதா மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது, மதுவுக்கு தடை இருந்தாலும் இந்தியாவில் மராட்டிய மக்களை விட பீகார் மக்கள்தான் மது அருந்துவதில் முன்னணியில் இருக்கின்றனர் .

பீகாரில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15.5 சதவிகிதம் பேர் இப்போதும் மது அருந்துகின்றனர். கிராமப்புறங்களில் 15.8 சதவிகித பேரும் நகரப்புறத்தில் 14 சதவிகிதம் பேரும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே வேளையில், மதுவுக்கு தடை இல்லாத மகாராஸ்டிர மாநிலத்தில் 13.9 சதவிகிதம் பேரே மது பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் மகாராஸ்டிரத்தில் மது அருந்துவோர் சதவிகிதம் பீகாரை விட குறைவாகவே உள்ளது. இந்த மாநிலத்தில் நகரப்புறங்களில் 13 சதவிகிதம் பேரும் கிராமப்புறங்களில் 14.7 சதவிகிதம் பேரும் மது அருந்தும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். பெண்களை எடுத்துக் கொண்டால் இரு மாநிலங்களிலும் தலா 0.4 சதவிகிதம் பேர் மது அருந்துகின்றனர். வீடுகளிலேயே மது தயாரிக்கும் வித்தையில் பீகாரிகள் கை தேர்ந்தவர்களாம். இதனால்தான் பீகாரில் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்துவது கடும் சவால் நிறைந்த பணியாகவே உள்ளது.

மது அருந்துவதை சோசியல் பழக்கமாக கொண்டுள்ள கோவா மாநிலத்தில் 36 சதவிகிதம் ஆண்கள் மது குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதே வேளையில் , தெலங்கானாவில் 44.3 சதவிகிதம் பேர் மது குடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்ககது. இந்தியாவிலேயே அதிகளவு மது அருந்தும் ஆண்கள் நிறைந்த மாநிலமாக தெலங்கானா உள்ளது. இந்த மாநிலத்தில் பெண்கள் கூட 6.7 சதவிகிதம் குடிபழக்கமுடையவர்களாக உள்ளனர். இரண்டாவது இடத்திலுள்ள சிக்கிம் மாநிலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்துகிறார்கள். இந்த குட்டி மாநிலத்தில் 39.8 சதவிகித ஆண்களும் 16.2 சதவிகித பெண்களும் மது பழக்கமுடையவர்கள்.

புகையிலை பயன்படுத்துவதில் நாட்டிலேயே மிஸோரம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 75 சதவிகித ஆண்கள் புகையிலை பயன்படுத்துகிறார்கள். கேரளமாநிலத்தில் நாட்டிலேயே குறைவாக 17 சதவிகித ஆண்களே புகையிலை பொருள்களை பயன்படுத்துவடிதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments